Wednesday, November 10, 2010

பெட்டி பின் பக்கம்.

சரி, இப்ப பொட்டியோட பின் பக்கத்தை பார்க்கலாம். இங்கே நிறைய வயர் வந்து போகும்.
முதல்ல மின்சக்தி கொடுக்கிற வயர். இது வழக்கமா மூணு தட்டை பின்னோட இருக்கும். இது வழியா உள்ளே இருக்கிற எஸ்எம்பிஎஸ் க்கு மின்சாரம் போகும். அது தேவையான இடங்களுக்கு தேவையான மின் சக்தியை பிரிச்சு கொடுக்கும்.
முன்னே எல்லாம் அடிக்கடி மின் தடை வருமா, அதனால ஒரு நிமிஷத்துக்கு ஒரு தடவை நாம் எழுதினதை சேமிச்சுகிட்டே இருக்கணும். எப்ப ஆற்காடு வருவார், எப்ப நாம கஷ்டப்பட்டு எழுதின கவிதை காணாம போகும் ந்னு தெரியாதே! அப்புறம் யூபிஎஸ் ந்னு ஒரு சமாசாரம் வந்தது. அனின்டரப்டட் பவர் சப்ளை!

ஆற்காட் வந்தா ஒழுங்கா நாம எழுதுனதை  சேமிச்சுவிட்டு கணினியை மூடலாம்! 10- 20 நிமிஷத்துக்கு மேலே சாதாரணமா இதால வண்டி ஓட்ட முடியாது! இது புதுசா இருக்கறப்ப. பழசான பிறகு இந்த நேரம் குறைஞ்சுகிட்டே வரும்.

சரி மின்சக்திக்கு வயர் சொருகியாச்சு இன்டர்நெட்டுக்கு போகலாம் ந்னு நினைக்காதீங்க! அதுக்கு மோடம்ன்னு ஒண்ணு உண்டு; அதுக்கு கனெக்ஷன் கொடுக்கணும். உங்க மோடத்தை பொருத்து அது யூஎஸ்பி, சீரியல் போர்ட், லான் - எப்படி வேணுமானாலும் இருக்கலாம். இதைப்பத்தி மேலே மோடம் பத்தி சொல்லறப்ப சொல்லறேன்.


அடுத்து நீலக்கலர்லே இருக்கிறது கணினியை திரைக்கு இணைக்கற வயர். இது ரொம்ப முக்கியம் இல்லையா? இது சரியா இல்லாம கணினி நமக்கு வேண்டியதை திரையில காட்ட முடியாது. இது டாமேஜ் ஆனா திரையிலே தமாஷா கால்குலஸ் டிவி மாதிரி கலர் கலரா கோடெல்லாம் மட்டும்தான் பாக்கலாம்!

கீழே பாருங்க. நீலக் கலர்,  பச்சைக்கலர் விசைப்பலகைக்கும் சொடுக்கிக்கும் இணைப்பு.








இதுக்கு  யூஎஸ்பி போர்ட் ந்னு பேர். (க்ளோஸ் அப் படம். ரொம்ப பெரிசா தெரியுது!) நாம வேலை பாத்த நாட்களிலே ஆபீஸ் ல ஒத்தர் இருப்பார். அவர் எல்லா வேலையும் பார்ப்பார். பைல் பார்ப்பார்; ஆபீஸர் மணி அடிச்சா ப்யூன் இல்லேனா போய் என்ன சார் ந்னு கேட்டு வருவார். ஆபீஸ் முடிஞ்சப்பறம் எல்லாரையும் கோத்து வாங்கி பேட்மிண்டன், வாலிபால் ந்னு ஏதாவது ஆட வைப்பார்; டிராமா போடுவார். இப்படி பன் முக திறமை அவருக்கு இருக்கும்.
இந்த ஆசாமி போலத்தான் இந்த யூஎஸ்பி போர்ட். (USB port). இது வழியா மோடம் கனெக்ட் பண்ணலாம், யூஎஸ்பி ஸ்டிக் சொருகி தகவல் காப்பி பண்ணலாம்; காமிரா கனெக்ட் பண்னி படங்களை கணினிக்கு மாத்தலாம்; ஏன் கணினியை இது மூலமா பூட் பண்ணவும் பண்ணலாம். இது வந்த புதுசுல 200 க்கு மேற்பட்ட சாதனங்கள் இணைக்கலாம்ன்னு விளம்பரம் செஞ்சாங்க!

படத்துல யூஎஸ்பி போர்டுக்கு பக்கத்துல இருக்கீறது லான் போர்ட். அட என்ன அப்பலேந்து போர்ட் போர்ட் என்கறிங்க? கப்பலா வந்து நிக்குதுன்னு கேக்கறிங்களா? ஹிஹிஹி! போர்ட் ந்னா ஒரு இணைப்பு செய்யக்கூடிய இடம். அவ்வளோதான்.
அப்புறம் பச்சை கலர்லே இருக்கறது நம்ம சொடுக்கியை இணைக்கிற ஹிஹி போர்ட்! நீலக்  கலர் விசைப்பலகையை இணைக்கிற போர்ட்.
அப்புறம் பச்சை, சிவப்பு, மஞ்சள் கலர்லே இருக்கறது ஒலி வாங்கி (மைக்), ஒலிபெருக்கி, மத்த உள்ளீட்டுக்கான போர்ட். இது வட்டமா இருக்கும் 3.5 மி.மீ ஜாக் ந்னு பேர்.
ம்ம்ம்ம்... வேறெதுவும் விட்டுட்டேனா? ஆங்! ஒரு சீரியல் கனெக்ஷன். மெஜென்டா கலர்.  இது வழியா நம்ம அச்சுப்பொறியோ மோடமோ இணைக்கப்படும். அதெல்லாமும் கொஞ்சம் கொஞ்சமா யூஎஸ்பி போர்டுக்கு மாறிகிட்டு இருக்கு. கூடிய சீக்கிரம் முன்னே இருந்த பாராலெல் போர்ட் மாதிரி இதுவும் காணாமல் போகும்.
ஒரு விஷயம் நினைவு வெச்சுக்கோங்க. தப்பா ஒரு வயரையும் இணைக்க முடியாது! அப்ப்டி ஒரு நிறத்தாலேயும் வடிவத்தாலேயும் ஜாக்கிறதை பண்னி இருக்கு. பச்சை கலர் வயரை எங்கேடா இணைக்கிறதுன்னு தடுமாற வேண்டாம். இணைக்கிற இடம் கட்டாயமா பச்சைக்கலர்லே இருக்கும்!

பொட்டியோட பக்கவாட்டிலே ஒண்ணும் அதிகமா இருக்காது. நெறையா தொளை போட்டு இருக்கும். உள்ளே எல்லா கருவிகளும் வேலை செஞ்சு வேத்துக்கொட்டும், இல்லையா? அதுக்கு காத்தாட இருக்கத்தான்! நெஜமாத்தான். சூடு அதிகமானா வேலை நிறுத்த போராட்டம் நடக்கும்! கணினி வேலை செய்யறதை நிறுத்திடும். அதுக்காக உள்ளே ஃபான் கூட போட்டு இருக்கு! சமயத்தில ரெண்டு மூணு ஃபான் கூட இருக்கும்.
பொட்டி பத்தி இப்போதைக்கு இவ்வளொ போதும்.

1 comment:

  1. கலர் கலரா எழுதி இருக்கீங்க. :P

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!