Friday, November 19, 2010

உள்ளே நுழைய...

சரி ஒரு வழியா கணினியிலே பொட்டிய திறக்காம தொட்டு பார்க்கக்கூடிய எல்லா விஷயங்களையும் பார்த்தாச்சு. இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு உள்ளே என்ன இருக்குன்னு எட்டிப்பார்க்கலாம்.
இந்த தொட்டு பார்க்ககூடிய பொருளெல்லாம் வன் பொருள்.
அப்படின்னா மென்பொருள் உண்டா? உண்ணடவே உண்டு!

சரி இப்ப கணினியை இயக்கி பார்க்கலாம்.
ம்ம்ம்ம்ம்?
இது வரைக்கும் கண்னியை தொட்டதே கிடையாது; அது பத்தி ஒண்ணுமே தெரியாதுன்னு சத்தியம் செய்யறவங்களுக்கு ஒரு வார்த்தை. எப்படியாது அக்கம் பக்கத்துல இருக்கிற நாலாவது படிக்கற வாண்டுக்கு லாலிபாப் மாதிரி ஏதாவது வாங்கி தந்து மூணே மூணு விஷயம் கத்துக்குங்க.
1.கனினியிலே எப்படி சாலிடேர் ஆடறது?
2.கணினியை எப்படி செயல் நிறுத்தறது?
3.இணையத்துக்கு எப்படி இணைக்கறது; எப்படி இந்த வலைப்பூவை பாத்து படிக்கறது?

முதலாவது கத்துக்கிட்டா கணின்னியை துவக்க, ஒரு நிரலை துவக்க, சொடுக்க, சொடுக்கி இழுக்கன்னு தேவையானது எல்லாம் கத்துக்கலாம். அதை இந்த வலைப்பூ வழியா சொல்லித்தரது கஷ்டம்.
என்ன நடக்கிறதுன்னு ஒண்ணும் புரியலைன்னா கணினியை நிறுத்த இரண்டாவது.
மேலே படிச்சு எக்ஸ்பெர்ட் ஆகறதுக்கு மூணாவது.

சரி இப்ப கணினியை இயக்கி பார்க்கலாம்.
பொட்டி முன் பக்கத்திலே இருக்கிற பெரிய பட்டனை அமுக்குங்க. (சின்னது ரீசெட் செய்ய). திரையிலே ஏதாச்சும் தெரியுதா? ஒரு திரை வந்து நாலு செகண்ட் இருந்து காணாமபோய் அப்புறம் வெள்ளை கலர்லே சின்ன லைன் ரெண்டு சிமிட்டி சிமிட்டி அப்புறம் திடீர்ன்னு ஏதேதோ ஆங்கில எழுத்துக்கள் எல்லாம் வந்து என்னன்னு படிக்கிறதுக்குள்ளே மறைஞ்சும் போயிடும்.

ஒண்ணும் கவலைப்படாதீங்க. இது வழக்கமா நடக்கிறதுதான்.
அடுத்து உள் நுழையற திரை வரும்.
இங்கே கொஞ்சம் நிக்கணும்.
இனி வரது இயங்கு தளம்.
அப்படின்னா?
ஆபரேடிங் ஸிஸ்டம். வழக்கமா விண்டோஸோட ஒரு பதிப்பா இருக்கும்.


அமேரிக்காவிலே வாங்கி இருந்தா மேக் ஆ இருக்க வாய்ப்பு இருக்கு. அப்படி இருந்தா எங்கிட்டே கேள்வி கேக்காதீங்க. அதை பார்த்தது கூட இல்லை!


கணினி வாங்கினவங்க புத்திசாலிங்களா இருந்தா லினக்ஸ் ஆ இருக்கும். ஹிஹி ஹிஹ்ஹி! :P


இந்த இயங்குதளம்தான் நமக்கு வேண்டிய சமாசாரங்களை எல்லாம் இந்த கணினி செய்யறத்துக்கு தேவையான கட்டளைகளை எல்லாம் சித்திர வடிவிலே காட்டுது.
எப்படி இருந்தாலும் பயனர் பேரை டைப் அடிச்சு கடவுச்சொல்லையும் டைப் அடிச்சு என்டர் விசையை தட்டினா உள்ளே போயிடலாம். அதாவது சரியா டைப் அடிச்சு இருந்தா! தப்பா அடிச்சா உள்ளே விடாது. (உபுண்டு சோதிச்சு பாத்துட்டு இல்லைன்னு ஸ்க்ரீனை ஆட்டற அழகை பாக்கணும், நீங்க!)

எனக்கு பிடிச்சது லீனக்ஸா இருந்தாலும் விண்டோஸே பலரும் பயன்படுத்தறதா இருக்கறதாலே இனி அதை ஒட்டியே கதை போகும். அங்கங்க எங்க லீனக்ஸ் எப்படி சிறந்ததுன்னு பெருமை அடிச்சுப்பேன்; கண்டுக்காதீங்க!

6 comments:

  1. லினக்ஸ் உபயோகிக்க கொஞ்சம் தொழில் நுட்ப அறிவு வேண்டும். எனக்கு அது இல்லை

    ReplyDelete
  2. அப்படி யார் சொன்னது எல்கே? எனக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆனா 4 வருஷமா அதான் பயன்படுத்தறேன். :-)
    இப்போதேல்லாம் கட்டளை வரி சமாசாரமே தேவையில்லை. எல்லாத்துக்குமே கூயி வந்தாச்சு. விண்டோஸ் பயன்படுத்தினவங்களுக்கு பெரிய வித்தியாசமே தெரியாது. என்ன எந்த ப்ரோக்ராம் எதுக்குன்னு கொஞ்சம் தெரிஞ்சுக்கணும். அவ்வளொதான்!

    ReplyDelete
  3. சரிதான், இன்னிக்குத் தான் வந்தேன். இவ்வளவும் படிச்சுப் பரிக்ஷை எழுதிப் பாஸ் பண்ணி! சரியாப் போச்சு போங்க, ரொம்ப வேகமாப் போஸ்டெல்லாம் போட்டிருக்கீங்க?? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு தகவலும் இல்லை! :(((((((((

    ReplyDelete
  4. வாங்க வாங்க! இதுக்குத்தான் ஸ்கூலுக்கு ஒழுங்கா வரணும் கட் அடிக்கக்கூடாதுன்னு சொல்லறது.ஹும்! போனாப்போறது, சீக்கிரம் எல்லாத்தையும் படிங்க! அரை பரீக்ஷை வரது. :P:P:P

    ReplyDelete
  5. (உபுண்டு சோதிச்சு பாத்துட்டு இல்லைன்னு ஸ்க்ரீனை ஆட்டற அழகை பாக்கணும், நீங்க!)//

    அதெல்லாம் இல்லாமலேயே நாங்க உள்ளே நுழைஞ்சுடுவோம் இல்ல?? :P

    ReplyDelete
  6. அதெல்லாம் இல்லாமலேயே நாங்க உள்ளே நுழைஞ்சுடுவோம் இல்ல?? //
    அப்படி செட் பண்ணாலாம்தான்! ;-)
    இருந்தாலும் அதிலே இருக்கிற அழகை சொன்னேன்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!