Friday, November 26, 2010

நோட்பேட் எடிட்...

ஒரு வழியா திருப்பியும் திறந்தாச்சா? அதுல எதுவும் மாற்றம் செய்யும் முன்னே மத்த விஷயம் பார்க்கலாம்.
இந்த மெனு சமாசாரங்களை பாத்துடலாம். ஒவ்வொரு மெனுவிலேயும் என்ன இருக்குன்னு பார்க்கலாம். ஒண்ணும் மாத்தாம ஒவ்வொண்ணுத்தையும் சொடுக்கி, வர பெட்டிகளை எல்லாம் கவனிங்க. அதுக என்ன சொல்லுதுன்னு பாத்து வெச்சுக்குங்க. இன்னொரு சமயம் இந்த அமைப்பை எல்லாம் மாத்தறது எப்படின்னு பார்க்கலாம். இல்லை இப்போதைக்கு எதை வேணா பண்ணி அப்புறம் ஓகேன்னு சொல்லாம கான்சல் ன்னு சொடுக்கிட்டு வெளியே வந்துடலாம். சும்மா பூந்து விளையாடுங்க. சரி பண்ண முடியாத பெரிய தப்பு ஒண்ணும் பண்ண முடியாது.

From notepad

From notepad

From notepad

From notepad

இப்ப இன்னொரு வரி கோப்பிலே எழுதலாம். so say all of us! எழுதிட்டு முன்னே மாதிரி பைல் மெனுவிலே சேவ் சொடுக்கினா .... அது பாட்டுக்கு தெமேன்னு இருக்கும். முன்னே மாதிரி பொட்டி தெறந்து என்ன எங்கேன்னு எல்லாம் கேட்காது. ஏன் அப்படி? அதுக்கு ஏற்கெனவே எங்கே சேமிச்சோம்ன்னு தெரியும். கோப்பு பேரும் தெரியும். வேற தகவல் ஒண்ணும் வேண்டாம் என்கிறதாலே பொட்டி எதுவும் திறக்காது.
சரி ஆனா இப்ப வேற இடத்திலே சேமிக்கணும் அல்லது நிறைய எழுதிட்டேன், வேற பேர்ல சேமிக்கணும்ன்னா என்ன செய்யறது? பைல் மெனுல சேவ் ஆஸ் ன்னு இருக்கு பாருங்க. அதை சொடுக்கினா திருப்பியும் பொட்டி திறக்கும். புது பேரை தேர்ந்தெடுத்து சேமிக்கலாம். இத்தனையும் செஞ்ச பிறகு பழைய கோப்பு பழைய இடத்திலேயே இருக்கும். ஏன்னா இப்ப இது ஒரு புது கோப்பா கணிக்கப்படுது.

புதுசா நாலு வரி டைப் அடிக்கிறீங்க. அப்புறம் சேமிக்காமலே வெளியே போகறீங்க. முன்ன்ன்ன்ன்ன்ன்ன் காலத்திலே இப்படி செஞ்சா அவ்வளொதான். கோப்பு போயே போச்சு. போயிந்தி. இட்ஸ் கான்!
அப்புறம் விண்டோஸே கொஞ்சம் புத்திசாலி ஆக ஆரம்பிச்சது. அப்பறம் சேமிக்காம மூடப்பாத்தா மூடாம கேள்வி கேக்கும். மாற்றங்கள் இருக்கே சேமிக்கவா, சேமிக்காம மூடவா, ரத்து பண்ணவா? ஒவ்வொன்னுத்துக்கும் ஒரு சின்ன பொட்டி போட்டு எதையாவது சொடுக்கச்சொல்லும். சேமின்னு சொன்னா அதுக்கான வேலை ஆரம்பிக்கும். சேமிக்காதேன்னா (நெஜமாவா?) சரின்னு சேமிக்காமலே மூடிடும். ரத்து பண்ணுன்னா? ஹிஹிஹி ஆரம்பத்திலே ஒண்ணும் புரியாத காலத்திலே இது ரொம்ப வசதி. என்ன செய்யறோம்ன்னு நிச்சயமா தெரியலைன்னா இதை அமுக்கிட்டு யோசிக்கலாம். அதாவது மூடுங்கிற கட்டளை ரத்து ஆகிடும்.
புது வரி ஒண்ணை எழுதினபின்னே வேற இடத்திலே இதை சேமிக்க விரும்பறீங்க. என்ன செய்யறது? ம்ம்ம்ம் வேற எங்கே சேமிக்கலாம்? சாதாரணமா கோப்புகள் எல்லாம் சேமிச்சு வைக்கிறது my documents லே. பைல் மெனுல சேவ் ஆஸ் ன்னு இருக்கு பாருங்க. அதை சொடுக்கினா திருப்பியும் பொட்டி திறக்கும். புது இடத்துக்கு my documents தேர்ந்தெடுத்து சேமிக்கலாம். இப்ப my documents ல போய் பார்த்தா அது இருக்கும். அதுக்கு எப்படி போறது? முன்னே மாதிரி செய்த மாதிரி ஸ்டார்ட்> ஆக்ஸசரீஸ் > விண்டோஸ் எக்ஸ்ப்லோரர், இப்படிப்போய் விண்டோஸ் எக்ஸ்ப்லோரர் ஐ சொடுக்கினா புதுசா ஒரு பொட்டி திறக்கும். அங்க இடது பக்கம் மை டாகுமெண்ட்ஸ் ன்னு இருக்கா? அதை சொடுக்குங்க!

From notepad

இதோ இருக்கே!

From notepad
இந்த மகத்தான கோப்பை அச்சடிச்சு பத்து பேருக்கு கொடுக்க நினைச்சீங்கன்னா செய்ய வேண்டியதெல்லாம் அச்சுப்பொறியை மின் சக்தி ஊட்டி (ஹிஹிஹி ஸ்விட்ச் ஆன் பண்ணுங்க) அதில பேப்பர் போட்டு ரெடியானதும் மெனுவிலே பைல்> ப்ரின்ட் சொடுக்கினா வெலாவரியா என்ன ஏதுன்னு விசாரிச்சுட்டு தடதடன்னு அச்சடிச்சு கொடுக்கும். அவ்வளோதான். என்னது? ப்ரின்டர் பத்தி தெரியாதா? பரவாயில்லை, அப்புறமா கத்துக்கலாம். இப்போதைக்கு இதுதான் வழின்னு தெரிஞ்சா போதும்.

3 comments:

  1. யப்பாடி, மிச்சத்துக்கு நாளைக்கு வரேன்.

    ReplyDelete

உங்க விமர்சனங்களை இங்கே எழுதுங்க!